தமிழக காங்கிரஸ் சார்பில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - செல்வப்பெருந்தகை

நாளை (டிச.18) காலை 10 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை அருகில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தமிழக காங்கிரஸ் சார்பில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - செல்வப்பெருந்தகை

சென்னை: நாட்டை உலுக்குகிற முக்கியமான பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாஜக-வினர் அனுமதி மறுத்ததை கண்டித்து, நாளை (டிச.18) காலை 10 மணிக்கு, ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சியினர் சார்பாக, அதானி உள்ளிட்டோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் கலவரத்தை அடக்கவும், பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி நேரில் சென்று பார்க்காதது குறித்தும் விவாதிப்பதற்காக மக்களவையிலும், மாநிலங்களவையிலும் உரிய விதிப்படி அனுமதி கோரப்பட்டது. ஆனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அது குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டது.