தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி: சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்

கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன.

தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி: சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றம்

தமிழகத்தில் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதாவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிமுகம் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கனிமப் பகுதி மேம்பாட்டு ஆணையம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கனிமவளம் கொண்ட நிலங்களும், அரசியல் சாசனத்தின் 7-ம் இணைப்புப் பட்டியலில் உள்ள நிலங்கள் என்ற பிரிவின் கீழ் வருகின்றன. எனவே, சுரங்கங்களைக் கொண்டுள்ள நிலங்களின் மீது வரி வசூலிப்பதற்காக சட்டம் இயற்ற மாநில சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.