தவறான தகவல் தாக்கல் செய்த விவகாரம்: கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பத்தூர்: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது உண்மைக்குப் புறம்பான தகவல்களை தாக்கல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் இன்று (டிச.17) ஆஜரானார். இதையடுத்து, வழக்கு விசாரணை அடுத்த மாதம் 6-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அப்போது தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் அவர் தனது சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை கொடுத்திருப்பதாக சர்ச்சை எழுந்தது.