​தாம்​பரம் - சந்த்​ர​காச்சி சிறப்பு ரயில் உட்பட 8 ரயில்​ சேவை நீட்​டிப்பு

தாம்பரம் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

​தாம்​பரம் - சந்த்​ர​காச்சி சிறப்பு ரயில் உட்பட 8 ரயில்​ சேவை நீட்​டிப்பு

சென்னை: தாம்பரம் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவை காலத்தை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் பயணிகளின் தேவைகள் அடிப்படையில் வழக்கமான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சேர்ப்பு, சிறப்பு ரயில்கள் இயக்குவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த ரயில்களுக்கு பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, அவற்றின் சேவை காலம் நீட்டிக்கப்படுகிறது. அந்தவகையில், தாம்பரம் - சந்த்ரகாச்சி சிறப்பு ரயில் உள்பட 8 சிறப்பு ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்பட உள்ளது.