திண்​டிவனம் அருகே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு பழனிசாமி ஆறுதல்

திண்​டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்​கப்​பட்ட 500 குடும்​பங்​களுக்கு அரிசி, மளிகைப் பொருட்​கள், போர்வை, காய்கறி உள்ளிட்​ட​வற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்​கினார்​.

திண்​டிவனம் அருகே வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு பழனிசாமி ஆறுதல்

விழுப்புரம்: திண்​டிவனம் அருகே பாதிராபுலியூரில் புயலால் பாதிக்​கப்​பட்ட 500 குடும்​பங்​களுக்கு அரிசி, மளிகைப் பொருட்​கள், போர்வை, காய்கறி உள்ளிட்​ட​வற்றை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று வழங்​கினார்​. அதே​போல, மயிலம் மற்றும் திண்​டிவனத்​தில் மழையால் பாதிக்​கப்​பட்​டுள்ள பகுதி​களைப் பார்​வை​யிட்டு, நிவாரணப் பொருட்களை வழங்​கினார். பின்னர் அவர் செய்தி​யாளர்​களிடம் கூறும்​போது, “புய​லால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். எனது குற்​றச்​சாட்டு​களுக்கு ​முதல்​வர் உரிய ப​தில் அளிப்​ப​தில்லை” என்​றார்.

Source : www.hindutamil.in