திண்டுக்கல் தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த தனியார் மருத்துவமனையில் நிபுணர்கள் ஆய்வு
தீ விபத்து நேரிட்ட திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்: தீ விபத்து நேரிட்ட திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் தடயவியல் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் உள்ள சிட்டி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் என்ஜிஓ காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (36), அவரது மகள் கோபிகா (6), பாலதிருப்பதி மணிமுருகன் (30), அவரது தாயார் மாரியம்மாள் (50), தேனி மாவட்டம் சீலம்பட்டி சுருளி (50), அவரது மனைவி சுப்புலட்சுமி (45) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டன.