திண்டுக்கல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

தேர்தல் வழக்கு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

திண்டுக்கல் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆஜர்

திண்டுக்கல்: தேர்தல் வழக்கு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.

2016 சட்டசபை தேர்தலின் போது மக்கள் நலக்கூட்டணி சார்பில், திண்டுக்கல்லில் பிப்ரவரி 22 ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாவட்ட செயலாளர் செல்வராகவன், நகர செயலாளர் செல்வேந்திரன் மற்றும் கூட்டணிக்கட்சியினர் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம்- 2ல் நடைபெற்றுவந்தது.