தென்னிந்தியாவில் முதல் முறையாக ‘கழுகு’களை ‘கண்’காணிக்க ஜிபிஎஸ்!
தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பாறு கழுகுகளை பாதுகாக்கும் அம்சமாக கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை: தென்னிந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் பாறு கழுகுகளை பாதுகாக்கும் அம்சமாக கழுகுகளுக்கு ஜி.பி.எஸ். கருவி பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவலாக காணப்பட்ட கழுகுகளின் எண்ணிக்கை 1990-களில் திடீரென சரியத் தொடங்கியது. இறந்த கால்நடைகளை உண்ணும் கழுகுகள் பல ஆயிரக்கணக்கில் இறந்தன. இதுகுறித்த ஆராய்ச்சியில், கால்நடைகளுக்கான வலி நிவாரணியான ‘டைக்ளோபினாக்’ மருந்து அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, 2006-ல் ‘டைக்ளோபினாக்’ மருந்து கால்நடை மருத்துவப் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. கால்நடைகளின் வலிநிவாரணிக்கு மாற்று மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டன. கடந்த 2022-ல் கழுகுகளை பாதுகாக்கும் வகையில் மாநில அளவிலான பாறு கழுகு பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது.