சபரிமலை சீசனால் வனத்தில் இருந்து மலை பாதைக்கு குரங்குகள் இடம்பெயர்வு - வாகனங்களை நிறுத்த தடை 

சபரிமலை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் வனத்தில் இருந்து மலைச்சாலைக்கு இடம்பெயர்ந்துள்ளன. குரங்குகளுக்கு உணவளிப்பதை் தடுக்க வனத்துறை சார்பில் ரோந்தும் கண்காணிப்பும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை சீசனால் வனத்தில் இருந்து மலை பாதைக்கு குரங்குகள் இடம்பெயர்வு - வாகனங்களை நிறுத்த தடை 

குமுளி: சபரிமலை சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான குரங்குகள் வனத்தில் இருந்து மலைச் சாலைக்கு இடம்பெயர்ந்துள்ளன. குரங்குகளுக்கு உணவளிப்பதை் தடுக்க வனத் துறை சார்பில் ரோந்தும் கண்காணிப்பும் மும்முரப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இதில் மாவட்ட எல்லையான குமுளியில் இருந்து வண்டிப்பெரியாறு, குட்டிக்கானம், முண்டக்காயம்,எரிமேலி உள்ளிட்ட பகுதிகள் அடர் வனப்பகுதிகளாகவே உள்ளன. ஆண்டு முழுவதும் இப்பகுதியில் சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டிருக்கும். இதில் வருபவர்கள் சில நேரங்களில் வனச்சாலையில் நின்று இயற்கையை ரசிப்பது உண்டு. அப்போது அங்கிருக்கும் குரங்களுக்கு பழம் உள்ளிட்டவற்றை வழங்குவர்.