தேவநாதன் யாதவுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக தேவநாதன் யாதவ் உள்ளிட்டோருக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மணென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் ரூ. 24.50 கோடியை மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமைநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் உள்ளிட்டோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.