‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர்  கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

‘‘நெல்லை கொலையில் இதுவரை 4 பேர் கைது’’ - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்

சென்னை: “நெல்லையில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த கொலையில், இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதைப் பொறுக்க முடியாமல், வழக்கம் போல சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற புழுத்துப்போன பொய்யை பாடத்தொடங்கியிருக்கிறார் எதிர்கட்சித்தலைவர்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், “திருநெல்வேலி மாவட்டம் கீழநத்தத்தை சேர்ந்த மாயாண்டி என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆஜராக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்துக்கு வரும்வழியில், நீதிமன்றத்துக்கு வெளியே கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கொலையாளிகளை விரட்டி சென்று ஒருவரை மடக்கிப் பிடித்துள்ளனர். காரில் தப்பி சென்ற மற்றவர்களையும் கொலை நடந்த இரண்டே மணி நேரத்தில் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.