பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘அமரன்’ படக்குழு
’அமரன்’ படக்குழுவினர் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.
புது டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ’அமரன்’ படக்குழுவினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘அமரன்’. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், அவரது மனைவி ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும் நடித்திருந்தனர்.