பாலியல் புகாருக்கு உள்ளானவர்களுக்கு விடுதலை: பழனிசாமி, அண்ணாமலை, பிரேமலதா கண்டனம்

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை விடுதலை செய்த காவல் துறைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாலியல் புகாருக்கு உள்ளானவர்களுக்கு விடுதலை: பழனிசாமி, அண்ணாமலை, பிரேமலதா கண்டனம்

சென்னை: மனநலம் பாதிக்​கப்​பட்ட மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்த காவல் துறைக்கு அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கண்டனம் தெரி​வித்​துள்ளனர். இது தொடர்பாக அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:

அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி: சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த மனநலம் குன்றிய கல்லூரி மாணவியை 10-க்​கும் மேற்​பட்​டோர் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய செய்தி அதிர்ச்​சி​அளிக்​கிறது. இது சம்பந்​தமாக பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் தந்தை புகார் அளித்த நிலை​யில், வழக்​கம்​போல் காவல்​துறை மிக அலட்சிய போக்​குடன் செயல்​பட்​டுள்​ளது. புகாரளித்​தவர்கள் அலைக்​கழிக்​கப்​பட்​டுள்​ளனர்.