புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை உருவாகிறது: நவ.26, 27, 28-ல் எங்கெல்லாம் ‘ஆரஞ்சு அலர்ட்’?

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகக்கூடும். நவ.26 முதல் நவ.28 வரை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை உருவாகிறது: நவ.26, 27, 28-ல் எங்கெல்லாம் ‘ஆரஞ்சு அலர்ட்’?

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகக்கூடும். நவ.26 முதல் நவ.28 வரை கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நவ.25-ம் தேதி முதல் நவ.28 வரையிலான நான்கு நாட்களுக்கு டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு சென்னை மையம் எச்சரித்துள்ளது. மேலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் ஆழ் கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.