டிச. 28ல் பாமக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அன்புமணி

பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

டிச. 28ல் பாமக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அன்புமணி

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,‘‘2024-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2025-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ என்ற தலைப்பில் டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் 28.12.2024 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெறும்.