புதுச்சேரி நகர் பகுதியில் வடியத் தொடங்கிய வெள்ளம் - திரும்பும் இயல்பு வாழ்க்கை!

புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் நகரப் பகுதிகளில் சாலை, குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. பல சாலைகளில் தண்ணீர் வடிந்து போக்குவரத்து தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு பிறகு 3-வது நாளான இன்றுதான் பல பகுதிகளில் மின் விநியோகம் தரப்பட்டு வருகிறது.

புதுச்சேரி நகர் பகுதியில் வடியத் தொடங்கிய வெள்ளம் - திரும்பும் இயல்பு வாழ்க்கை!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃபெஞ்சல் புயலால் நகரப் பகுதிகளில் சாலை, குடியிருப்புகளில் சூழ்ந்த வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. பல சாலைகளில் தண்ணீர் வடிந்து போக்குவரத்து தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு பிறகு 3-வது நாளான இன்றுதான் பல பகுதிகளில் மின் விநியோகம் தரப்பட்டு வருகிறது.

வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் புதுவையை தாக்கியது. புதுவையில் சனிக்கிழமை காலை முதல் சூறாவளி காற்றுடன் விடிய, விடிய கனமழை பெய்து கோரதாண்டவம் ஆடியது. இதனால் புதுவை பகுதி பெரும் சேதத்திற்கு உள்ளானது. புதுவையில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை கொட்டியது. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பெரும்பாலான வீடுகளின் தரைத் தளம் வெள்ளத்தில் மூழ்கியதால் அவர்கள் முதல் மாடியில் தஞ்சம் அடைந்தனர்.