பெருமளவில் கொடிநாள் நிதி மக்கள் வழங்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்​தின்  ஒவ்வொரு குடிமக​னும், முப்​படை​யினர் கொடி நாளுக்கு பெரு​மள​வில் நிதி​யளிக்க வேண்​டும் என்று ஆளுநர் ஆர்.என்​.ர​வி​யும் முதல்வர் மு.க.ஸ்​டா​லினும் அழைப்பு விடுத்​துள்ளனர்.

பெருமளவில் கொடிநாள் நிதி மக்கள் வழங்க வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

சென்னை: தமிழகத்​தின் ஒவ்வொரு குடிமக​னும், முப்​படை​யினர் கொடி நாளுக்கு பெரு​மள​வில் நிதி​யளிக்க வேண்​டும் என்று ஆளுநர் ஆர்.என்​.ர​வி​யும் முதல்வர் மு.க.ஸ்​டா​லினும் அழைப்பு விடுத்​துள்ளனர்.

ஆளுநர் மாளி​கை​யில் நேற்று காலை கொடிநாள் நிதியாக ரூ.5 லட்சத்தை ஆளுநர் ஆர்.என்​.ரவி, மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே​விடம் வழங்​கினார். உடன், பொதுத்​துறை செயலர் ரீட்டா ஹரிஷ் தாக்​கர், ஆளுநரின் செயலர் கிர்​லோஷ்கு​மார், பொதுத்​துறை துணை செயலர் பவன்​கு​மார் ஜி.கிரியப்​பானவர் ஆகியோர் இருந்​தனர்.