பைக் டாக்சியை தடை செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.
சென்னை: பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை, எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையின் இருபுறமும் நேற்று காலை முதலே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தொடர்ந்து, கூவம் ஆறு பாலத்தில் இருந்து பேரணியாக ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பைக் டாக்சியை தடை செய்யுமாறும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துமாறும் அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேயர் சுந்தர் ராவ் நாயுடு சிலை அருகே சென்றபோது அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.