மகத்தான தமிழ்ப் பணி!
ஹார்வர்டில் தமிழுக்கு இருக்கை அமைத்திடத் தமிழ் இருக்கை குழுமம் முயன்று வரும் தகவலை, முதன் முதலில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்றது இந்து தமிழ் திசை நாளிதழ்.
தமிழர்களைத் தேசிய நீரோட்டத்தில் கடந்த 144 ஆண்டுகளாக இணைத்து வருவது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ். தமிழகத்திலிருந்து வெளியானாலும் தேசிய நாளிதழாக வெற்றிக்கொடி நாட்டியுள்ள ‘தி இந்து’, தமிழில் இல்லையே என்கிற தமிழர்களின் ஆதங்கத்தைப் போக்கும்விதமாக இந்து தமிழ் திசை நாளிதழை கடந்த 2013இல் தொடங்கியது ஒரு வரலாற்று நிகழ்வு.
பத்தாம் ஆண்டில் நுழையும் இந்து தமிழ் திசையின் தமிழ்ப்பணி மகத்தானது என்பதற்கு நாங்களே நேரடி சாட்சி. உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டில் தமிழுக்கு இருக்கை அமைத்திடத் தமிழ் இருக்கை குழுமம் முயன்று வரும் தகவலை, முதன் முதலில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்றது இந்து தமிழ் திசை நாளிதழ்.