மயிலாடுதுறையில் விடிய விடிய மழை: வீடுகள், விளைநிலங்களை சூழ்ந்த வெள்ளம்
மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகள், விளைநிலங்களில் நேற்று வெள்ளம் சூழ்ந்தது.
மயிலாடுதுறை/ காரைக்கால்/ நாகப்பட்டினம்/ திருவாரூர்: மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புகள், விளைநிலங்களில் நேற்று வெள்ளம் சூழ்ந்தது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 3-வது நாளாக நேற்று கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
மயிலாடுதுறை, தரங்கம்பாடி, செம்பனார்கோவில், பொறையாறு உள்ளிட்ட பகுதிகளிலும், சுற்று வட்டார கிராமங்களிலும் குடியிருப்புகள், கடைவீதிகள், தாழ்வான இடங்கள் உள்ளிட்டவை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகின்றன. மாவட்டம் முழுவதும் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.