மெரினாவில் ரோப் கார்: மாநகராட்சி திட்டம்
சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிக்கை அளிக்க ஆலோசகரை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரோப் கார் சேவையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக அறிக்கை அளிக்க ஆலோசகரை நியமிப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
உலகின் 2-வது நீளமான (13 கி.மீ.) கடற்கரை என்ற பெருமைக்குரியது சென்னை மெரினா. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடமாக விளங்குகிறது. அணிவகுத்து நிற்கும் தலைவர்களின் சிலைகள், வகை வகையான சிற்றுண்டியகங்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகள் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்கள்.