“விஜய் மணிப்பூருக்கு என்னோடு வரத் தயாரா?” - அண்ணாமலை கேள்வி

விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவரோடு நானும் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் யார்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அங்கு உயிரிழந்தோர் எத்தனை பேர்? தற்போது உயிரிழந்தோர் எத்தனை பேர்? போன்ற பொது அறிவு தகவல்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

“விஜய் மணிப்பூருக்கு என்னோடு வரத் தயாரா?” - அண்ணாமலை கேள்வி

சென்னை: “விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால் அவரோடு நானும் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். மணிப்பூரில் என்ன நடக்கிறது, அங்கிருக்கும் பழங்குடி மக்கள் யார்? காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் அங்கு உயிரிழந்தோர் எத்தனை பேர்? தற்போது உயிரிழந்தோர் எத்தனை பேர்? போன்ற பொது அறிவு தகவல்களை விஜய் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேறு ஆளே கிடைக்கவில்லையா? அந்த புத்தகத்தை பெற்றுக் கொண்ட ஆனந்த் டெல்டும்டே ஒரு நகர்ப்புற நக்சல். தமிழக அரசியல் எந்த திசையை நோக்கி செல்கிறது என்பது கேள்விக்குறி.