விருகம்பாக்கம், ஓட்டேரி கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் ஆய்வு
வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது.
சென்னை: வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது.
இதையடுத்து சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகில் மற்றும் கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம் கால் வாயில் நடைபெறும் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.