‘விவசாயிகளிடையே ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது’ - அன்புமணி ஆவேசம்
விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை: “விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லாததால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் இன்று (டிச. 21) நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள், உழவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “யாருக்கும் நிரூபிப்பதற்காக மாநாட்டை நடத்தவில்லை. உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக மாநாட்டை நடத்துகிறோம்.