ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு: ஸ்ரீரங்கம் ரங்கராஜன் கைது
ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ரங்கராஜன் நரசிம்மன். இவர் ‘Our Temples’ (நம்முடைய கோவில்கள்) என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் மத ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.