அஜித்குமாரால் வந்த பைக் ஆசை - மஞ்சு வாரியர் விளக்கம்
நடிகை மஞ்சு வாரியர் தமிழில், தனுஷின் ‘அசுரன்', அஜித்தின் ‘துணிவு’, ரஜினியின் ‘வேட்டையன்’ படங்களில் நடித்தார்.
நடிகை மஞ்சு வாரியர் தமிழில், தனுஷின் ‘அசுரன்', அஜித்தின் ‘துணிவு’, ரஜினியின் ‘வேட்டையன்’ படங்களில் நடித்தார். இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை 2’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாகிறது.
இவர் அளித்துள்ள பேட்டியில், நடிகர் அஜித்குமார் தனது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, “அஜித்குமார் பல விஷயங்கள் பற்றிப் பேசுவார். அவர் பேசும்போது ரசித்துக் கேட்டுக் கொண்டிருப்பேன். அவருக்கு பைக் மீதிருக்கும் ஆர்வம் எல்லோருக்கும் தெரியும். சிறு வயதிலிருந்தே பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. ஆனால் அதற்காக நான் எதுவும் பண்ணவில்லை. அவரை போல பைக் மீது பேரார்வம் எனக்கு இல்லை என்றாலும் அவரது செயல் எனக்கு அதைத்தூண்டியது. தனக்குப் பிடித்ததை செய்ய அவர் நேரம் ஒதுக்குகிறார். அவரைப் பார்த்து ஊக்கமடைந்து பைக் ஓட்ட தொடங்கினேன். நாம்சரியாக பைக்கை பயன்படுத்தினால் அதுவும் சரியாக இருக்கும் என்று அஜித் கூறியிருக்கிறார்” என்றார். ‘துணிவு’ படப்பிடிப்புக்குப் பிறகு, பி.எம்.டபிள்யு பைக்கை வாங்கிய மஞ்சு வாரியர், அஜித்துடன் இணைந்து பைக் பயணம் மேற்கொண்டார்.