அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தோருக்கு ரூ.50,000 பரிசு
வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.
சென்னை: வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து இதர நாட்களில் முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் விதமாக மூன்று பேருக்கு தலா ரூ.10,000 வழங்கும் திட்டம் ஜனவரி முதல் நடைமுறையில் உள்ளது.
நவம்பர் மாதம் முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணம் செய்ய முன்பதிவு செய்யும் அனைத்து பயணச்சீட்டுகளும் மாதாந்திர குலுக்கல் முறைக்கு தகுதி பெறும் வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.