சென்னை மாநகராட்சியில் பொது கழிப்பறைகளை ரூ.1,202 கோடியில் மேம்படுத்த முதல்வர் அனுமதி

சென்னை மாநகராட்சியின், சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை பொது,  தனியார் கூட்டாண்மை பங்களிப்பு மூலம் ரூ.1202 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் பொது கழிப்பறைகளை ரூ.1,202 கோடியில் மேம்படுத்த முதல்வர் அனுமதி

சென்னை: சென்னை மாநகராட்சியின், சமுதாய மற்றும் பொது கழிப்பறைகளை பொது, தனியார் கூட்டாண்மை பங்களிப்பு மூலம் ரூ.1202 கோடியில் மேம்படுத்தும் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: “சென்னை மாநகரின் சுகாதாரத்தை மேம்படுத்த, சென்னை மாநகராட்சி தனியார் துறையுடன் (சலுகைதாரர்) இணைந்து தரமான உட்கட்டமைப்புகளைக் கொண்ட சமுதாய மற்றும் பொது கழிப்பறை வசதிகளை உருவாக்கி மற்றும் பராமரித்து வருகிறது. இத்திட்டமானது, வடிவமைத்தல், கட்டுதல், நிதி மேலாண்மை, செயலாக்குதல் மற்றும் திருப்பி ஒப்படைத்தல் முறையில் செயல்படுத்தப்படுகிறது.