சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.170 கோடி ஒதுக்கீடு: சுமார் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு
மாமல்லபுரம் நந்தவனம் பாரம்பரிய பூங்காவில், ரூ.99.67 கோடி செலவில், தோட்டப் பூங்கா, கலாச்சார மற்றும் செயல்பாட்டு தளம், நிகழ்வுகள், கூட்டங்களுக்கான திறந்தவெளி அரங்கம் ஆகியவை அமைக்கப்படும்.
சென்னை: மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்கா, உதகை தேவாலாவில் உள்ள பூந்தோட்டம் ஆகியவற்றை மேம்படுத்த மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.170 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
மூலதன செலவுகளுக்காக மாநிலங்களுக்கு சிறப்பு உதவி வழங்கும் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 2 முக்கியமான சுற்றுலா திட்டங்களுக்கு மத்திய சுற்றுலா அமைச்சகம் ரூ.169.9 கோடி ஒதுக்கியுள்ளது. இதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள நந்தவனம் பாரம்பரிய பூங்காவும், உதகை தேவாலாவில் உள்ள பூந்தோட்டமும் மேம்படுத்தப்படும்.