அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ முதல் நாள் வசூல் எவ்வளவு?
அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு இந்தியில் மிரட்டலான வரவேற்பு கிடைத்துள்ளது.
ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.294 கோடி வசூலை குவித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இந்தியில் மிரட்டலான வரவேற்பு கிடைத்துள்ளது.
பாலிவுட் பாட்ஷாவான ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் இந்தி வெர்ஷன் முதல் நாளில் ரூ.65 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. ஆனால், ‘புஷ்பா 2’ இந்தி வெர்ஷன் அதன் சாதனையை முறியடித்து முதல் நாளில் ரூ.72 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இது இந்தியில் வெளியான படங்களில் முதல் நாள் அதிகபட்ச வசூலாகும். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.