‘கங்குவா’ தோல்வி: மீண்டும் ஞானவேல்ராஜாவுக்கு கைகொடுக்கும் சூர்யா!
‘கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சூர்யா.
சென்னை: ‘கங்குவா’ படத்தின் தோல்விக்குப் பிறகு மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் சூர்யா.
சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனால் அப்படத்தை தயாரித்த ஞானவேல்ராஜாவுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தோல்வி அடைந்த படங்களில், இதன் நஷ்டம் பெரியது என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனை சரிசெய்யும் விதமாக, மீண்டும் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க சூர்யா ஒப்புக் கொண்டுள்ளார். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்காக சரியான கதை ஒன்றை தேர்வு செய்யும் நோக்கில் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறார்.