கனமழை எதிரொலி: டெல்டா மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைந்திருக்கிறது.
சென்னை: டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழு அங்கு விரைந்திருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திங்கள்கிழமை இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், அரக்கணோத்தில் இருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.