காட்டுயிர் புகைப்படக் கலையில் உச்சம் தொடும் கோவை சிறுவன்!

ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததைஒரே ஒரு புகைப்படத்தால் புரிய வைக்கமுடியும். குறிப்பாக, காட்டுயிர் புகைப்படக்கலை (வைல்ட் லைப் போட்டோகிராஃபி) என்பது உலகளவில் பிரபலமான ஒன்றாகிவிட்டது.

காட்டுயிர் புகைப்படக் கலையில் உச்சம் தொடும் கோவை சிறுவன்!

கோவை: ஆயிரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாததைஒரே ஒரு புகைப்படத்தால் புரிய வைக்கமுடியும். குறிப்பாக, காட்டுயிர் புகைப்படக்கலை (வைல்ட் லைப் போட்டோகிராஃபி) என்பது உலகளவில் பிரபலமான ஒன்றாகிவிட்டது. இந்தியாவில் காட்டுயிர் புகைப்படக்கலை என்பது நூற்றுக்கணக்கானவர்களின் பொழுதுபோக்காகவும், முழு நேரத் தொழிலாகவும் மாறியுள்ளது.

காட்டுயிர்களை பொருத்தவரை டிஸ்கவரி, அனிமல் பிளானட், நேஷனல் ஜியாகிரஃபிக் சேனல்களில் வன உயிரினங்களின் வாழ்வியலை படமாக்கி காண்பிக்கும் டாக்குமென்ட்டரி காட்சிகள் பிரமிப்பையும், இயற்கை அழகை ரசிக்க வைப்பதாகவும் இருக்கின்றன.