குமரி கண்ணாடி கூண்டு பாலத்தை டிச.30-ல் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் எ.வ.வேலு
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை ஆகியவற்றை இணைக்கும் கண்ணாடி கூண்டு பாலத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 30-ம் தேதி திறந்து வைக்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.