மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கோவையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது.
கோவை: சட்ட மேதை அம்பேத்கரை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவமதித்து விட்டதாக கூறி, மத்திய அமைச்சரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை இன்று (டிச.19) அறிவித்தது.
அதன்படி, கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக சார்பில், மேட்டுப்பாளையம் சாலை, வடகோவை அருகேயுள்ள, பாரதிபார்க் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இன்று(டிச.19) கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை வகித்தார்.