குரூப்-2 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
குரூப் - 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
சென்னை: குரூப் - 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. சார் - பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் 2,327 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி நடத்திய இத்தேர்வை 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தற்போது இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்த 57 நாட்களில் முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.