கூடலூரில் சுருக்கில் சிக்கி ஆண் புலி உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட செலுக்காடி பகுதியில் காப்பு காட்டை ஒட்டி 3 வயது ஆண் புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது
கூடலூர்: கூடலூரில் சுருக்கில் சிக்கி ஆண் புலி உயிரிழந்தது. இது குறித்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட செலுக்காடி பகுதியில் காப்பு காட்டை ஒட்டி 3 வயது ஆண் புலி ஒன்று சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் மற்றும் வனத் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது, யாரோ சிலர் வனவிலங்கை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், புலி இறந்து கிடந்த இடத்தில் உள்ள தனியார் தோட்ட உரிமையாளர்கள் மற்றும் மக்களிடம் வனத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.