சமூக வலைதள உலகில் பழங்கதைகளை பாதுகாக்க சென்னை இலக்கியம், கலை விழாவில் வலியுறுத்தல்
சென்னை இலக்கியம், கலை விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர்கள், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள உலகில் பழைய கதைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்
சென்னை: சென்னை இலக்கியம், கலை விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற எழுத்தாளர்கள், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதள உலகில் பழைய கதைகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
சென்னை சர்வதேச மையம் (சிஐசி) சார்பில் கோட்டூர்புரத்தில் உள்ள சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தில் ‘சென்னை இலக்கியம் மற்றும் கலை விழா 3.0’ நேற்று நடைபெற்றது. சிஐசி தலைவர் கோபால் சீனிவாசன் தலைமை வகித்து ‘வெளியுறவு கொள்கை பற்றிய நுண்ணறிவுகளை பேசும் நிபுணர்கள்’ (Experts Speak Insights on Foreign Policy) என்ற நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஐசிடி அகாடமி இயக்குநர் என்.லட்சுமி நாராயணன் பெற்றுக் கொண்டார்.