‘சூது கவ்வும் 2’ சிறந்த படமாக இருக்கும்: இயக்குநர் நம்பிக்கை

நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது

‘சூது கவ்வும் 2’ சிறந்த படமாக இருக்கும்: இயக்குநர் நம்பிக்கை

நலன் குமரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன், கருணாகரன் உட்பட பலர் நடித்து ஹிட்டான படம், ‘சூது கவ்வும்’. 2013-ல் வெளியான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி இருக்கிறது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார், தங்கம் சினிமாஸ் எஸ்.தங்கராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். இதில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷா, அருள்தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஜே.அர்ஜுன் இயக்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சண்முகா பிலிம்ஸ் கே. சுரேஷ் வரும் 13-ம் தேதி வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பா. ரஞ்சித் வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.