சென்னையில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 7 பயிற்சிகள் விரைவில் தொடக்கம்
பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப் பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சென்னை: பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு நிறுத்தப்பட்ட புக் பைண்டிங் பயிற்சி உட்பட மேலும் புதிதாக 7 பயிற்சிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் ஆண்டு தோறும் 21 பேருக்கு புக் பைண்டிங் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ‘நூலகங்கள் கணினிமயம் ஆகிவிட்டதால் புக் பைண்டிங் பயிற்சி முடிக்கும் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று கூறி அந்த படிப்பை தமிழக அரசு திடீரென நிறுத்திவிட்டது.