சென்னை போர் நினைவு சின்னத்தில் ‘விஜய் திவஸ்’ கொண்டாட்டம் ராணுவ அதிகாரிகள் மரியாதை
பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றியை பெற்றதை குறிக்கும் ‘விஜய் திவஸ்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
சென்னை: பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றியை பெற்றதை குறிக்கும் ‘விஜய் திவஸ்’ தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இந்தியா வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுமார் 93 ஆயிரம் பேர் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். போரின் விளைவாக வங்கதேசம் விடுதலை அடைந்தது. இதை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பர் 16-ம் தேதி சார்பில் ‘விஜய் திவஸ்’ (வெற்றி தினம்) கொண்டாடப்படுகிறது.