விஜய்க்கு ‘ஷாக்’ கொடுத்த ரஜினி... புதுத் தெம்புடன் புறப்பட்ட சீமான்!

யாரும் எதிர்பாராத திருப்பமாக சீமான் - ரஜினி சந்திப்பு நிகழ்ந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த​போது, தீவிர எதிர்ப்​புக்​குரல் சீமானிட​மிருந்து வந்தது.

விஜய்க்கு ‘ஷாக்’ கொடுத்த ரஜினி... புதுத் தெம்புடன் புறப்பட்ட சீமான்!

யாரும் எதிர்பாராத திருப்பமாக சீமான் - ரஜினி சந்திப்பு நிகழ்ந்திருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகி இருக்கிறது. ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்த​போது, தீவிர எதிர்ப்​புக்​குரல் சீமானிட​மிருந்து வந்தது. ரஜினி அரசியல் பிரவேசத்​துக்கு முழுக்குப் போட்டதும், “ஆகச்​சிறந்த கலைஞர்” என்று பாராட்​டியதும் அதே சீமான் தான். ஆனால், நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்ததை எதிர்த்த சீமான், நடிகர் விஜய் அரசியல் பேசிய​போது, “என் தம்பி விஜய்” என வாஞ்சை​யா​னார்.

அதேசமயம், திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று தான் என சொன்னதால் தம்பி விஜய் மீது இப்போது ‘கொல வெறியில்’ இருக்​கிறார் சீமான். இப்படியான சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வீடு தேடிச் சென்று சந்தித்து பரபரப்பை கூட்டி​யிருக்​கிறார் சீமான். திரையுலகின் ‘சூப்பர் ஸ்டார்’ பட்டம் தொடங்கி, ஜெயிலர் பட விழாவில் ரஜினி சொன்ன, ‘காக்கா கழுகு’ கதை வரைக்கும் ரஜினி ரசிகர்​களுக்​கும், விஜய் ரசிகர்​களுக்கும் மோதல்கள் தொடர்​கின்றன. “விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன்.