சென்னை மெரினா வளைவு சாலையில் அங்காடி அமைத்தும் திறந்தவெளி கடைபோடும் வியாபாரிகள்... ஏன்?
இந்த நவீன மீன் அங்காடியை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அக்டோபரில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், தற்போது, முன்பு இருந்ததைப் போலவே, திறந்தவெளியில் மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மெரினா வளைவு சாலையில் உள்ள நொச்சிக்குப்பத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.15 கோடியில் 366 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி அமைக்கப்பட்டது. இதில் மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச்சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இவ்வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.