சேதுபாவாசத்திரம் - சிவன் கோயில் குளத்தில் நீர் நாய்கள்!
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் கோயில் குளத்தில் நீர் நாய்கள் உள்ளதை பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.
சேதுபாவாசத்திரம் சிவன் கோயில் குளத்தில் தற்போது தாமரைக் கொடிகள் படர்ந்து ஓரளவு தண்ணீர் உள்ளது. கடந்த 22-ம் தேதி இந்த குளத்தில் வித்தியாசமான 2 உயிரினங்கள் தண்ணீரில் நீந்தி விளையாடுவதையும், அவை குளத்தின் திட்டுகளில் ஓய்வெடுப்பதையும் அப்பகுதி மக்கள் கண்டனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் சாகுல்ஹமீது மற்றும் கிராமத்தினர் வனத் துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து பட்டுக்கோட்டை வனச் சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் நேற்று அங்கு வந்து சிவன் கோயில் குளத்தை கண்காணித்தனர்.