குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒருநாள் ஆசிரியராக பகிர்ந்த சிறுவயது நினைவுகள்!

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று பள்ளி மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஒருநாள் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது தனது சிறுவயது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை நினைவுகூர்ந்தார்.

ராஷ்ட்ரபதி மாளிகை அருகே உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் குறித்து முர்மு பாடம் நடத்தினார். அப்போது, “எனது சிறிய கிராமத்தில் இருந்து நான் முதல்முறை டெல்லி வந்தபோது அனைவரும் முகத்தில் மாஸ்க் அணிந்திருந்தனர். டெல்லியின் காற்று மாசு அந்த அளவு மோசம். பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க, நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீரை வீணாக்குவதைக் குறைப்பதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.