தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 238 குடிசைகள், 107 ஓட்டு வீடுகள் சேதம்

கனமழை​யால் சுவர்கள் ஊறியிருந்த நிலை​யில், தஞ்சாவூர் மாவட்​டத்​தில் ஒரே நாளில் 238 குடிசை வீடு​கள், 107 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்​துள்ளன. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 238 குடிசைகள், 107 ஓட்டு வீடுகள் சேதம்

தஞ்சாவூர்: கனமழை​யால் சுவர்கள் ஊறியிருந்த நிலை​யில், தஞ்சாவூர் மாவட்​டத்​தில் ஒரே நாளில் 238 குடிசை வீடு​கள், 107 ஓட்டு வீடுகள் இடிந்து சேதமடைந்​துள்ளன.

தஞ்சாவூர் மாவட்​டத்​தில் கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை தொடர்ந்து மழை பெய்​தது. இதனால் தாழ்வான இடங்​களில் மழைநீர் தேங்​கியது. சில இடங்​களில் வீடு​களுக்​குள் வெள்ளம் புகுந்​தது. உடனடியாக அங்கிருந்​தவர்கள் பாது​காப்பாக அருகில் உள்ள பள்ளி​களில் தங்க வைக்​கப்​பட்​டனர்.