தமிழக கடற்கரைகளில் கடல் ஆமைகள் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கி அரசாணை
தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகளை பாதுகாக்கவும், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதியளித்தும், நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகளை பாதுகாக்கவும், ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்த அனுமதியளித்தும், நிதி ஒதுக்கியும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வனத்துறை செயலர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: “தமிழகத்தில் உள்ள கடல் ஆமைகள், ஆண்டுக்கு ரூ.1 கோடி செலவில் ஆமை பாதுகாவலர்களை ஈடுபடுத்தி பாதுகாக்கப்படும் என கடந்த ஜூன் 26ம் தேதி வனத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.