திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம்

பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே மக்களுக்கு புண்ணியம்: தமிழிசை விமர்சனம்

சென்னை: பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும், ‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்’’ என்று கண்டனம் தெரிவித்தார்.