திரைப்படங்களில் பெண்மை ஒளிர்கிறதா?
பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பொதுவாகத் திரைப்படங்கள் பெண்களைத் தாயாகவும் தெய்வமாகவும் கொண்டாடுகிற மாதிரி மாயையை உருவாக்கினாலும் பெரும்பாலான படங்களில் பெண்கள் கீழ்த்தரமாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். சமீபத்தில் தமிழில் வெளிவந்த இரண்டு படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
உன் சமையல் அறையில் திரைப்படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரை நோக்கி போடா வாடா என்கிற ஆண்களை அழைப்பதற்கான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கிறார்கள். சமூகத்தின் பொதுப்புத்தியே, ஆணாக இருந்து திருநங்கையாக மாறுபவர்களை நோக்கி மீண்டும் மீண்டும் அவனது ஆண் தன்மையை நினைவுபடுத்தும் விதமாக அவன் இவன் என்று அழைப்பது. தவிர, திருநங்கைகளை டேய் என்று அழைப்பது அவர்களை எவ்வளவு காயப்படுத்தும் என்பதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் படம் எடுத்திருப்பது பெரிய வருத்தத்தையே கொடுக்கிறது.