“தூக்கமே வருவதில்லை...” - ஃபெஞ்சல் பெரும் புயலின் துயரக் கதை இது!

ஃபெஞ்சல் புயலால்  ஏற்பட்ட கனமழையில் சாத்தனூர் அணை நிரம்பி 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில்தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

“தூக்கமே வருவதில்லை...” - ஃபெஞ்சல் பெரும் புயலின் துயரக் கதை இது!

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையில் சாத்தனூர் அணை நிரம்பி 1 லட்சத்து 70 ஆயிரம் கனஅடிநீர் திறக்கப்பட்டதால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு மற்றும் மலட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் சித்தலிங்கமடம், புதுப்பாளையம், பையூர், தொட்டிகுடிசை, திருவெண்ணெய்நல்லூர், ஏமப்பூர், கிராமம், ஆலங்குப்பம், அரசூர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கரையோர கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த வெள்ளத்தில் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் (57) என்பவரது வீடு கடந்த 1-ம் தேதி இரவு மூழ்கியது. கலையரசன் மற்றும் அவரது மனைவி சுந்தரி (50), மகன் புகழேந்தி (25) ஆகியோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உயிர் தப்பிக்க 3 பேரும் ஆற்றின் நடுவே இருந்த வேப்பமரத்தை பிடித்தனர். அந்த மரமும் சற்று நேரத்தில் வேரோடு பிடுங்கிக்கொண்டு ஆற்றில் அடித்து சென்றதால், மரத்தை பிடித்து இருந்த 3 பேரும் மீண்டும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் சுந்தரியும், புகழேந்தியும் மற்றொரு வேப்ப மரத்தின் கிளையைப் பற்றி கரை சேர்ந்தனர். ஆனால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கலையரசன் பரிதாபமாக உயிரிழந்தார்.